1901க்கு பின்னர் பெய்த அசுரத்தனமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

rain
sivalingam| Last Updated: திங்கள், 30 செப்டம்பர் 2019 (07:28 IST)
1901ஆம் ஆண்டுக்கு பின் அதாவது 118 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது

பருவ மழைக்காலம் கடந்த மாதமே முடிவடைந்த போதிலும் இன்னும் பீகார் உள்பட ஒருசில வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளத்தால் பல பகுதிகள் மிதந்து வருகின்றன.


இந்த நிலையில் கடந்த 118 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிக பலத்த மழை இந்த செப்டம்பர் மாதத்தில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. இந்தியா முழுவதும் இம்மாதம் பெய்த மழையின் சராசரி அளவு 241 மில்லிமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கு முன் கடந்த 1901ம் ஆண்டுதான் இந்த அளவுக்கு அதிகபட்ச மழை இந்தியாவில் பெய்துள்ளது என்பதும் இந்த மழை வழக்கமான மழையை விட 48 சதவீதம் அதிகம் என்றும் வானிலை மையத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது

மேலும் இந்தியா முழுவதும் ஒரே நாளில் 285 மில்லி மீட்டர் மழை பெய்த சாதனையும் இந்த மாதம் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்
குஜராத், பீகார் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அம்மாநில மக்கள் கடும் அச்சத்தில் உள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொள்ள மூன்று மாநிலங்களிலும் மீட்புப்படையினர் தயாராக உள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :