புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2019 (20:33 IST)

சுழல் பந்து வீச்சில் பவுன்சர் ... நிலைதடுமாறி கீழே விழுந்த பேட்ஸ்மேன் !

மேற்கிந்திய கிரிக்கெட் பேட்ஸ்மேன், ரஷல் சிறந்த பேட்ஸ் மேன் என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், ஆப்கான், சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சாளரிம் எதிர்கொள்ள முடியாமல் நிலைதடுமாறி மைதானத்தில் கீழே விழுகின்ற வீடியோ வெளியாகியுள்ளது.
அபுதாபியில் டி - 10 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நார்தன் வாரியர்ஸ் அணிக்காக ரஷல் விளையாடி வருகிறார். இந்நிலையில்,இன்று நார்தம் டைகர்ஸ் - பங்களா டைகர்ஸ் அணிகளுக்கு இடையே டி - 10 போட்டி நடைபெற்றது. இதில் 19 வயதான ஆப்கான் வீரர் , கைகாஸ், வீசிய பந்தை  ரஷல் எதிர்கொண்டார்.
 
அப்போது,  பந்து பவுன்சராகவே அதைச் சமாளிக்க முடிமால் ரஷல் கிழே விழுந்தார். சுழற்பந்து வீச்சில் பவுன்சரான பந்தினால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
 
கைகாஸ், வீசிய பந்து சுழற்பந்து தானே என ரஷல் ஹெல்மெட் போடாமல் பேட் செய்தது குறிப்பிடத்தக்கது.