புதன், 6 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 நவம்பர் 2019 (16:46 IST)

106 ரன்னுக்கு ஆல் அவுட்: கவலைக்கிடமான வங்கதேசம்

இந்தியாவுடனான இரண்டாவது டெஸ்ட்டில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே பெற்றுள்ளது வங்கதேசம்.

வங்கதேசம் – இந்தியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. முதல்முறையாக இந்த ஆட்டம் பகல் – இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. டாஸ் வென்று பேட்டிங்க் தேர்ந்தெடுத்த வங்கதேசம் ஆரம்பத்திலேயே சரிவை சந்தித்தது.
தொடக்க ஆட்டக்காரரான இம்ருல் கயேஸ் 4 ரன்களில் அவுட்டாக, அடுத்தடுத்து களமிறங்கிய மொனிமுல், முகமது மிதுன், முசபிர் ரஹிம் ஆகியோர் ஒரு ரன் கூட எடுக்காமல் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பின்னால் வந்த லித்தோன் தாஸ் 5 பவுண்டரிகள் அடித்து ரன்ரேட்டை தக்க வைக்க முயற்சித்தாலும் 24 ரன்களில் அவரும் வெளியேறினார்.

பிங்க் பந்து விளையாட கடினமாக இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இவ்வளவு கடினம் என்று சொல்லவில்லையே என்பது போல ஆகிவிட்டது வங்கதேச நிலைமை. 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே பெற்றது வங்கதேசம்.

தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்ய இருக்கிறது. 106 இந்தியாவுக்கு பெரிய இலக்கு இல்லை என்றாலும் இரவு நேர ஆட்டம், பனிப்பொழிவு, பிங்க் பந்து என்று வேறுசில இடர்பாடுகள் காத்துள்ளன. இவற்றை சமாளித்து இந்திய வீரர்கள் எப்படி விளையாட போகிறார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.