”சஞ்சு சாம்சனை ஏன் சேர்க்கவில்லை?”.டிவிட்டரில் ரசிகர்கள் கேள்வி

Arun Prasath| Last Updated: வெள்ளி, 22 நவம்பர் 2019 (10:31 IST)
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20, ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் ஏன் இடம்பெறவில்லை என டிவிட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணியிலிருந்து எந்தெந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தோனி சேர்க்கப்படவில்லை.

இதை தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் 3 டி20 போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை. மேலும் ரிஷப் பண்ட் கடந்த போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்த நிலையில் சரிவர விளையாடவில்லை என கிரிகெட் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

ஆனால் ரிஷப் பண்ட் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான போட்டிகளில் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பளிக்காமல் அணியிலிருந்து நீக்கினீர்கள் என டிவிட்டரில் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சஞ்சு சாம்சன் கடந்த விஜய் ஹசாரே டிராஃபி போட்டியில் கேரளா அணி சார்பாக விளையாடியபோது 129 பந்துகளில் 212 ரன்கள் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :