புரோ கபடி 2018: குஜராத் பெங்கால் அணிகள் வெற்றி

Last Modified வியாழன், 29 நவம்பர் 2018 (23:01 IST)
புரோ கபடி போட்டி தொடரின் லீக் போட்டிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய இரண்டு போட்டிகளில் குஜராத் மற்றும் பெங்கால் அணிகள் வெற்றி பெற்றுள்ளன

இன்றைய முதல் போட்டியில் குஜராத் அணி புனே அணியுடன் மோதியது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தை தன் கையில் வைத்திருந்த குஜராத் அணி எந்தவித கஷ்டமும் இல்லாமல் புனே அணியை 35-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.


அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பெங்கால் அணி பெங்களூரு அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட சம புள்ளிகள் எடுத்து வந்ததால் ஆட்டம் பரபரப்பாக இருந்தது. இருப்பினும் இறுதியில் 44-37 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை பெங்கால் அணி வீழ்த்தியது


இதில் மேலும் படிக்கவும் :