வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 ஜூலை 2022 (20:21 IST)

3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இங்கிலாந்து கொடுத்த இலக்கு!

india 3rd
3வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு இங்கிலாந்து கொடுத்த இலக்கு!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது 
 
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 45.5 ஓவர்களில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டும் 60 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்திய பந்து வீச்சை பொருத்தவரை ஹர்திக் பாண்டியா 4 விக்கட்டுக்களையும் சாஹல் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த நிலையில் 260 என்ற இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வரும் நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு அவுட் ஆகி விட்டனர்
 
சற்று முன் வரை இந்திய அணி 8 ஓவர்களில்  2 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் என விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் என்பதால் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது