செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (10:46 IST)

மீண்டும் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் கிரிக்கெட் – கலந்து கொள்ளுமா இந்தியா ?

2022 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2018-ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்  இருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது விமர்ச்னங்களை உருவாக்கியது. 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து மீண்டும் கிரிக்கெட்டை இணைக்கவேண்டும் என எழுந்த கோரிக்கைகளை அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிரிக்கெட்டும் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஓசிஏ பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் கிரிக்கெட் போட்டிகள்  சீனாவின் ஹாங்ஜூ நகரில் கிரிக்கெட் விளையாடப்படும். கிரிக்கெட் போட்டிகள் டி 20 போட்டிகளாக நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் இதில் இப்போது இந்திய கிரிக்கெட் அணிக் கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பிசிசிஐ அமைப்பு பல்வேறு நாடுகளுக்கு இந்திய அணியை அனுப்பும் பயணத்திட்டத்தை வைத்திருப்பதால், இது குறித்து இப்போது கருத்து தெரிவிக்க இயலாது எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஓசிஏ தலைவர் ஷேக் அகமது அல் பஹத் அல் சபாப் தெரிவித்துள்ள செய்தியில் ’ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ அனுப்பாதது வேதனையாகும். இந்தப் பதவியில் இருப்பவர்கள் விளையாட்டை பிரபிலப்படுத்த விருப்பமில்லை, பணம் சம்பாதிக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் சந்தையையும், விளையாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்’ எனக் காட்டமாக விமர்சித்துள்ளனர்.