புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (07:28 IST)

பாகிஸ்தான் நடவடிக்கையால் பிரபல நடிகையின் பதவிக்கு ஆபத்தா?

பாகிஸ்தான் நடவடிக்கையால் பிரபல நடிகையின் பதவிக்கு ஆபத்தா?
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2016ஆம் ஆண்டு முதல் யுனிசெஃப்பின் நல்லெண்ணத் தூதராக இருந்து வருவது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 அட்டாக் நடத்தி அந்நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்த தாக்குதலுக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஆனால் யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதராக நடுநிலையுடன் இருக்க வேண்டிய பிரியங்கா சோப்ரா, இந்திய விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் யுனிசெஃப்-ன் நல்லெண்ணத் தூதர் பதவியிலிருந்து விலக வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆன்லைனில் கையெழுத்து இயக்கப் போராட்டத்தை நடத்தி வரும் பாகிஸ்தான், 'இந்தியா-பாகிஸ்தான் இடையே தாக்குதலின் போது நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக அவர் நடந்துகொண்டது கண்டிக்கத்தக்கது என்றும்,
எனவே யூனிசெப் பதவியில் இருந்து அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.


பாகிஸ்தான் நடவடிக்கையால் பிரபல நடிகையின் பதவிக்கு ஆபத்தா?
மேலும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக ஆன்லைனில் கையெழுத்து இயக்கப் போராட்டத்தையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது