வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 4 மார்ச் 2019 (08:30 IST)

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?

ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்று புதின் தெரிவித்து உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

அடுத்த 70 ஆண்டுகளுக்கு ராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் கூட்டோடு இந்தியாவில் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏ.கே.203 ரக தொழிற்சாலையால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்

தொழிற்சாலை மூலம் தயார் செய்யப்படும் முதல் 7 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் நமது நாட்டு பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப்படும். அதன்பின் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடிதத்தை படித்துக் காட்டினார். அதில், ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்று புதின் தெரிவித்து இருந்தார்.