ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்தாரா? திடுக்கிடும் தகவல்

Last Modified திங்கள், 4 மார்ச் 2019 (07:40 IST)
சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் உள்பட இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை

ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசார் கடந்த சில நாட்களாக சிறுநீரக பாதிப்பு காரணமாக பாகிஸ்தானில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், ஆனால் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் மசூத் அசாரின் மரணம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.


மேலும் இந்திய விமானப்படை பாலகோட்டில் நடத்திய தாக்குதலில்தான் மசூத் அசார் உயிரிழந்து விட்டதாக இன்னொரு அதிகாரபூர்வமற்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்திய உளவுத்துறை அமைப்புகள் மசூத் அசாரின் இந்த தகவல்கள் குறித்த உண்மையை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :