வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (13:36 IST)

தோனியை எங்க நாட்டுக்கு அனுப்புங்க! – லெட்டர் போட்ட பங்களாதேஷ்!

வங்கதேசத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டிக்கு தோனியை விளையாட அனுமதிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை போட்டிகளுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. இது ரசிகர்கள் இடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் எதிரான இந்திய அணி அறிவிக்கப்படும்போதும் அதில் தோனி இடம்பெறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.

சில காலமாக ராணுவத்துக்கு சென்று பயிற்சியில் இருந்த தோனி தற்போது மீண்டும் தனது கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 2020ல் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்துக்காகதான் தோனி தற்போது மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வங்கதேசத்தில் உலக லெவன் அணிகள் இடையிலான ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. இதில் பங்குபெற இந்திய வீரர்களான தோனி, ரோகித் ஷர்மா, புஜாரா ஆகிய சிலரை அனுமதிக்குமாறு வங்கதேசம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.