இந்திய டிரைவரோடு செல்பி எடுத்த பாக். வீரர்கள்! – ஏன் தெரியுமா?

Slfie
Prasanth Karthick| Last Modified செவ்வாய், 26 நவம்பர் 2019 (13:26 IST)
ஆஸ்திரேலியாவில் டாக்ஸியில் பயணம் செய்த பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய டிரைவர் பணம் வாங்க மறுத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றனர். இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது. இதன் இரண்டாவது டெஸ்ட் 29ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஆஸ்திரேலியா சென்ற பாகிஸ்தான் வீரர்கள் அங்குள்ள பல இடங்களையும் சுற்றிப்பார்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் ஷா அப்ரிடி, யாசிர் ஷா மற்றும் நஷீர் ஷா ஆகியோர் டாக்ஸியில் ஒரு உணவகத்துக்கு சென்றுள்ளனர்.

selfie

அவர்கள் சென்ற டாக்ஸியை ஓட்டி சென்றவர் ஒரு இந்தியர். உணவகம் சென்றதும் டிரைவருக்கு வீரர்கள் பணம் கொடுத்துள்ளனர். ஆனால் அதை வாங்கி கொள்ள அவர் மறுத்துள்ளார். இதனால் வியப்படைந்த பாகிஸ்தான் வீரர்கள் அவரை உணவகத்துக்கு அழைத்து சென்று அவரோடு உணவருந்தி இருக்கின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.இதில் மேலும் படிக்கவும் :