தொடர்புடைய செய்திகள்
- 5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா
- ரோகித் ரெய்னா அதிரடியில் இந்திய அணி 176 ரன்கள் குவிப்பு
- முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்
- முத்தரப்பு ஐந்தாவது டி20 போட்டி: இந்தியா-வங்காளதேசம் மீண்டும் பலப்பரீட்சை
- ஹிட் அவுட் சாதனை படைத்த கே.எல்.ராகுல்: கொண்டாடுவதற்கு அல்ல...
வாழ்வா? சாவா? போட்டியில் இன்று வங்காளதேச- இலங்கை அணிகள் மோதல்
இலங்கை- வங்காளதேச அணிகள் மோதும் வாழ்வா? சாவா? டி20 போட்டி இன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் பங்ககேற்கும் முத்தரப்பு டி20 போட்டி கடந்த 6ம் தேதி இலங்கையில் தொடங்கியது.
முதல் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்றவது போட்டி இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் வங்காளதேச அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி. நான்காவது போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐந்தாவது போட்டி இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே நடந்தது. அந்த போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்நிலையில் வங்காளதேச - இலங்கை அணிகள் மோதும் ஆறாவது முத்தரப்பு டி20 போட்டி இன்று 7.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் விளையாடும்.
அடுத்த கட்டுரையில்