பேட்டிங்கில் சொதப்பிய இலங்கை: இறுதி போட்டியில் வங்கதேசம்?
நிதாஹாஸ் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டம் இலங்கை மற்றும் வங்கதேச நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்திய அணியுடன் இறுதி போட்டியில் போதும்
இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி , முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
கடந்த ஆட்டத்தில் 214 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற வங்கதேச அணிக்கு 160 ரன்கள் இலக்கு என்பது எளிதாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.