ஆஸ்திரேலிய பந்துவீச்சாளருக்கு கொரோனாவா ? ரசிகர்கள் அதிர்ச்சி !

Last Updated: வெள்ளி, 13 மார்ச் 2020 (17:52 IST)

ஆஸ்திரேலியாவின் இளம் பந்துவீச்சாளரை தனிமைப்படுத்தி அவருகு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி தற்போது நியுசிலாந்துக்கு சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென தொண்டை வலி ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் சோதனைகள் செய்து வருகின்றனர். இன்னும் முடிவுகள் வெளியாகததால் எதையும் உறுதியாக சொல்ல முடியாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :