திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை...கர்நாடக அரசு உத்தரவு !

corona virus
sinoj kiyan| Last Modified வெள்ளி, 13 மார்ச் 2020 (16:31 IST)
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை...கர்நாடக மாநில அரசு உத்தரவு !

உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில்,
4 பேருக்கு கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருந்ததை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. டெல்லியில் 6, உத்தர பிரதேசத்தில் 10, மகராஷ்டிராவில் 11, லடாக்கில் 3 என இதுவரை இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 74 பேர் இந்த
வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கொரானா வைரஸ் பரவுவதால் கர்நாடகாவில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூட கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அடுத்த 1 வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :