கொரோனா வைரஸ் பீதி – வாகன ஓட்டிகளிடம் சோதனைக்கு தடை !
வாகன ஓட்டிகளுக்கு குடிபோதை சோதனை நடத்த வேண்டாம் என மதுரை மாவட்ட காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதிலும் 4720 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 1,28,343 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
கொரோனா எச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் பல நாடுகளுடனான விமான போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் விதமாக போலிஸார் வாகன ஓட்டிகளிடம் குடிபோதை சோதனை நடத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.