செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (21:53 IST)

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் இன்னிங்ஸ் வெற்றியா?

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த  முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அடிலெய்டில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 589 ரன்கள் குவித்த நிலையில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களை எடுத்து 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 589/3  டிக்ளேர்
 
டேவிட் வார்னர்: 335 ரன்கள்
லாபிசாஞ்சே: 162 ரன்கள்
வேட்: 38 ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித்: 36 ரன்கள்
 
பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸ்: 96/6
 
பாபர் அசாம்: 43 ரன்கள்
ஷான் மசூத்: 19 ரன்கள்
இஃப்திகார் அகமது: 10 ரன்கள்
அசார் அலி: 9 ரன்கள்
 
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஸ்டார்க் 4 விக்கெட்டுக்களையும், கம்மின்ஸ் மற்றும் ஹாஸில்வுட் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இரண்டாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 413 ரன்கள் பின்னடைவில் இருப்பதோடு கையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வைத்து உள்ளது. எனவே அந்த அணி பாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சிலும் இதே போல் விளையாடினால் இன்னிங்ஸ் தோல்வி உறுதி என்று கூறப்படுகிறது