புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (16:47 IST)

சான்ஸே இல்ல...நீதான் ஹீரோ...திருமண அரங்கிற்கு விமானத்தில் இருந்து குதித்த மாப்பிள்ளை ...

திருமணம் நம் மனித வாழ்வில் இன்றியமையாத பங்கு வகிக்கிறது. மற்ற நாடுகளில் எப்படியோ ஆனால் இந்தியாவில் அது ஒரு பெரிய திருவிழாவைப் போல் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், திருமண அரங்கிற்கு மணமகன் ஒருவர் ஸ்கை டைவிங் மூலமாக வந்திறங்கிய அதிசயம் எல்லோரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.
பிரபல நடிகரும் நடனக் கலைஞருமான ஆகாஷ் யாதவ், மெக்‌ஷிகோவில் நடைபெற்ற தனது திருமணத்தின்போது, சற்று வித்தியாசமாகவும், தன்னை உள்பட யாராலும் மறக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டார்.
 
அதாவது, பாராசூட்டில் மிதந்தபடி நட்சத்திர ஹோட்டலில்  வந்து இறங்கிய புதுமாப்பிள்ளை, அங்கு கூடி இருந்தவர்களுக்கு ஆச்சர்யத்தை பரிசளித்தார். இந்தக் காட்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தி வைரல் ஆகிவருகிறது.
 
நடிகர் ஆகாஷூக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.