வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஜூலை 2023 (18:13 IST)

ஆஷஸ் 5வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு..இங்கிலாந்து அணி திணறல்..

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையே ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்தது. 
 
ஏற்கனவே நடைபெற்ற நான்கு கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளில்  இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஒரு போட்டியை டிராவில் முடிவடைந்தது. 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கிய நிலையில்  ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 
 
இதனை அடுத்து இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சற்றுமுன் வரை அந்த அணி மூன்று விக்கெட்டைகளை இழந்து 131 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது, புரூக்ஸ் 48 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
 
 ஆஸ்திரேலியா அணியின் ஹாசில்வுட், பேட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்த டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்றால் தொடர வென்று விடும் என்பதும் இங்கிலாந்து வென்றால் தொடர் சமன் ஆகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran