ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 25 ஜனவரி 2023 (18:02 IST)

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: சானியா- போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

saniya mirza
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில்  கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டில் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்  கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இத்ல், ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவு ஆகியவற்றில் போட்டிகள் நடந்து வருகிறது.

கலப்பு இரட்டையர்  பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி வரும் நிலையில்,  இன்றைய அரையிறுதி ஆட்டத்தில், டெசிரேக்ராவ்சி ஸ்குப்ஸ்கி இணையை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில், சானியா மிர்சா – போபண்ணா ஜோடி 7-6,6-7, 10-6  என்ற செட் கணக்கில் வீழ்த்தி கலப்பு இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.

வரும் 28 ஆம் தேதி  இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதிலும் சானியா  - போபண்ணா ஜோடி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.