1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 25 ஜனவரி 2023 (16:34 IST)

மகளிர் ஐபிஎல்: 5 அணிகள் ரூ.4,669 கோடிக்கு ஏலம்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு தொகை?

Women IPL
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்று அதற்கான ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஐந்து அணிகளுக்கான ஏலம் சற்றுமுன் முடிவடைந்த நிலையில் இதன் ஏலம் மூலம் பிசிசிஐக்கு மொத்தம் ரூ.4,669 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
மகளிர் ஐபிஎல் போட்டியில் அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய ஐந்து அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அணிகளை ஏலம் எடுத்த நிறுவனங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
1. அகமதாபாத் அணி - ரூ.1289 கோடி: ஏலம் எடுத்த நிறுவனம்  அதானி குழுமம்
 
2. மும்பை அணி - ரூ.912.99 கோடி: ஏலம் எடுத்த நிறுவனம் இந்தியா வின் ஸ்போர்ட்ஸ் பிரைவைட் லிமிடேட்: 
 
3. பெங்களூரு அணி - ரூ.901 கோடி: ஏலம் எடுத்த நிறுவனம் ராயல் சேலஞ்சர்ஸ் ஸ்போர்ட்ஸ் பிரைவைட் லிமிடேட்
 
4.  டெல்லி அணி - ரூ.810  கோடி: ஏலம் எடுத்த நிறுவனம் JSW GMR கிரிக்கெட்  பிரைவைட் லிமிடேட்
 
5. லக்னோ அணி - ரூ.757  கோடி: ஏலம் எடுத்த நிறுவனம் கேப்ரி குளோபல் ஹோல்டிங்  பிரைவைட் லிமிடேட்: 
 
Edited by Siva