பரிதாபமாக முதல் டெஸ்ட்டை இழந்த இந்தியா – வெற்றிக்கணக்கை ஆரம்பித்த ஆஸி!
இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 36 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து முடித்துக் கொண்டதை அடுத்து ஆஸி அணி எளிதாக வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா மற்றும அஸிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸி 191 ரன்களும் சேர்த்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்ஙினிஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்றது. அதையடுத்து இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடியது.
இதையடுத்து இன்று காலை ஆட்டம் தொடங்கிய நிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் வருவது போவதுமான இருந்து தங்கள் விக்கெட்டை இழந்தனர். இதனால் மளமளவென விக்கெட்கள் விழ இந்திய அணி 36 ரன்களை சேர்ப்பதற்குள் 9 விக்கெட்களை இழந்தது. அதையடுத்து முகமது ஷமிக்கு அடிபட்டதால் அவர் ரிட்டையர்ட் ஹர்ட் ஆனார். இதனால் இந்திய அணி டெஸ்ட் வரலாற்றிலேயே இல்லாத குறைந்த ஸ்கோரான 36 ரன்களுக்கு தனது ஆட்டத்தை முடித்தது. ஆஸி அணியின் ஹேசில்வுட் 5 விக்கெட்களையும் கம்மின்ஸ் 4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.முதல் இன்னிங்ஸில் பெற்ற 53 ரன்கள் முன்னிலையோடு இண்டஹ் 36 ரன்களும் சேர்ந்து 90 ரன்கள் வெற்றி இலக்காக ஆஸிக்கு நிர்ணயித்தது.
இதையடுத்து களமிறங்கிய ஆஸி அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு எளிய இலகை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.