1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 டிசம்பர் 2020 (11:00 IST)

இந்தியாவின் முதல் டைம் லூப் திரைப்படம்- ஜாங்கோ டீசர் வெளியீடு!

சி வி குமார் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ள ஜாங்கோ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஒரு காலத்தில் சி வி குமார் பரபரப்பாக படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் அவர் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டார். ஆனால் இப்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கொற்றவை என்ற படத்தையும் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் தயாரிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ஜாங்கோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. டைம் டிராவலை மையமாக வைத்து இந்தியாவில் சில படங்கள் வெளியாகியுள்ள நிலையில் முதன் முதலாக டைம் லூப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.