புதன், 13 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (16:49 IST)

தடகள வீரர்களுக்கு ஒரே தடிமன் கொண்ட ஷூ? – புதிய விதிகள்!

தடகள போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் ஒரே தடிமன் கொண்ட ஷூக்களை இனி பயன்படுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்தும் பல வீரர்கள் தடகள போட்டிகளுக்காக பயிற்சி பெற்று வருகின்றனர். ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் என அனைத்து போட்டிகளிலும் தடகள போட்டிகள் முக்கிய இடம் பெறுகின்றன. தடகள போட்டிகளில் விளையாடும் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் வசதிகேற்ப வெவ்வேறு தடிமன் அளவு கொண்ட ஷூக்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.

ஆனால் ஷூவின் தடிமன் மாறுவதால் வீரர்கள் வெளிப்படுத்தும் திறனிலும் மாற்றங்கள் தெரிவதாக சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச தடகள சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இனி அனைத்து தடகள வீரர்களும் 20 மி.மீ தடிமன் கொண்ட ஷூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.