வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:46 IST)

பிரபல பாடகி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை!

ஜப்பான் நாட்டின் பிரபல பாடகி மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த  பிரபல பாடகர் மாட்சுடா சீகோவின் மகள் சயாகா கண்டா(35). இவர் பிரபல பாடகியாவார். இவர்  பிரோஸன் என்ற படத்தை ஜப்பான் மொழியில் பெயர்த்ததால் பிரபலமக அறியப்பட்டுள்ளார்.

 இவர் கடந்த சனிக்கிழமை அன்று அங்குள்ள சப்போரா தியேட்டரில் மை ஃபேர் லேடி என்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்த நிலையில், அவர் நீண்ட நேரமாக நிகழ்ச்சிக்கு வரததால் ரசிகர்கள் எதிர்பாத்துக் காத்திருந்தனர்.

அப்போது, பாடகி சயாகா இறந்து  கிடப்பதாக ரசிகர்களுக்கு தகவல் வெளியானதை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் பாடகி சயாகி குளத்தில் இறந்து மிதந்து கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் சயாகா 6 வதுமாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.