1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 21 டிசம்பர் 2021 (18:02 IST)

கலைஞர் அதிகம் உச்சரித்த பெயரே போய்வா! -கவிஞர் வைரமுத்து இரங்கல்

கலைஞரின் உதவியாளராக பணியாற்றிய சண்முகநாதன் மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதிக்கு 50 ஆண்டுகளாக கலைஞரின் உதவியாளராக பணியாற்றியவர் சண்முகநாதன். இந்நிலையில் உடல் நலக்குறைவால் சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். கடின உழைப்பாளியான சண்முகநாதன், கலைஞரின் நிழல் என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் சண்முகம் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்  இரங்கல் பதிவிட்டுள்ளார்.
அதில், அண்ணனே!
சண்முகநாதனே! போய்வா!

அண்ணாவுக்குப் பிறகு கலைஞர்
அதிகம் உச்சரித்த பெயரே
போய்வா!

கலைஞர் ஒலி
நீ எழுத்து

அறிவின் ஆதிக்கமே
அன்பின் நீர்த்தேக்கமே போய்வா!

கட்சி ஆட்சி குடும்பமென்னும்
முக்கோணத்தின்
முக்காலமறிந்த திரிஞானியே

உழைப்பின்
சத்தமில்லாத சரவெடியே
ஓய்வெடு; போய்வா! எனத் தெரிவித்துள்ளார்.