திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 10 பிப்ரவரி 2021 (23:20 IST)

கோப்பை வெல்ல...விராட் கோலி அணியின் பேட்டிங் ஆலோசகர் இவர்தான் !

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் விரும்பம் மற்றும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது ஐபிஎல்தொடர்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்றது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூர் அணி, தோல்வியை தழுவியது.

இந்நிலையில், பெங்களூர் அணிக்கு பேட்டிங் ஆலோசகரான சங்கர் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் பெங்களூர் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றியவர் சஞ்சய் பங்கர் ஆவார்.இவர் இந்த ஆண்டுமுதல் ஐபிஎல் அணிகளில் முக்கியமான அணியாகவுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பேட்டிங் பயிற்சியாளாராக சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்ற பெங்களூர் அணி தீவிரமாகவுள்ளது.