ஐசிசி ஒருநாள் தரவரிசை – கோஹ்லி, பூம்ரா முதலிடம் !

Last Modified ஞாயிறு, 17 மார்ச் 2019 (18:36 IST)
ஐசிசி ஒருநாள் அணிக்கான தரவரிசையை அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் கோஹ்லி மற்றும் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

ஐசிசி கடந்த மாதத்திற்கான ஒருநாள் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான அணியை வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதல் இடத்தில் அசைக்க முடியாமல் உள்ளார். பவுலிங்கிலும் பூம்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

கோஹ்லிக்கு அடுத்து ரோஹித் ஷர்மா 2 ஆவது இடத்திலும், ராஸ் டெய்லர், டி காக் டூ ப்ளஸ்சி மற்றும்  பாபர் ஆஸ்ம்ஆகியோர் முறையே 3, 4 ,5 மற்றும் 6 ஆவது ஆவது இடத்தில் உள்ளனர். 7 முதல் 10 இடங்கள் வரை முறையே ஜோய் ரூட், பக்கர் ஜமான், மார்டின் கப்தில், சாய் ஹோப் உள்ளனர்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா 774 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.  டிரன்ட் போல்ட்  2-வது இடத்திலும் ரஷித் கான் 3-வது இடத்திலும் உள்ளனர்.

அணிகளுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து முதலிடத்திலும் அதைத்தொடர்ந்து இந்திய அணியும் உள்ளன. நியுசிலாந்து 3 ஆவது இடத்திலும், ஆஸ்திரேலியா 4 ஆவது இடத்திலும்  உள்ளன.இதில் மேலும் படிக்கவும் :