செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (13:43 IST)

அதிமுகவில் தொடங்கியது வேட்பாளர் தேர்வு – களத்தில் இறங்கிய ஓபிஎஸ் & ஈபிஸ் !

திமுகவில் கடந்த சில தினங்களாக வேட்பாளர் தேர்வு தொடங்கி நடைபெற்றுள்ள நிலையில் அதிமுகவும் இப்போது வேட்பாளர் தேர்வில் களமிறங்கியுள்ளது.

நாடே எதிர்பார்த்த மக்களவைத் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. 534 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியிலுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடக்கிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக மற்றும் அதிமுக அணியில் பெருவாரியான கட்சிகள் கூட்டணி அமைத்துவிட்டன. மக்கள் நீதி மய்யம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகியக் கட்சிகள் தனித்து நிற்பதாக அறிகுறிகள் தெரிகின்றன. திமுக கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்தது போக மீதமுள்ள 20 தொகுதிகளில் நிற்கப் போகும் வேட்பாளர்களின் தேர்வினைத் தொடங்கியுள்ளது.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் போக 21 இடங்களிலும் போட்டியிடவுள்ளது. அதிமுக கூட்டணிக்கு தமாகா வரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை மாறுபடும் என தெரிகிறது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று  அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. விருப்ப மனு தாக்கல் செய்துள்ளவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேர்காணல் நடத்திவருகின்றனர்.

இந்த நேர்காணல் நாளையோடு முடிய இருக்கிறது. தற்போது அதிமுக உறுதியாகப் போட்டியிடும் என நம்பபப்டும் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.