1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. India vs England warmup match cancelled

தொடர் மழை எதிரொலி: இந்தியா-இங்கிலாந்து பயிற்சி ஆட்டம் ரத்து..!

ICC Worldcup
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி  அக்டோபர் 4ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன
 
அந்த வகையில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற இருந்த நிலையில் டாஸ் போடப்பட்ட பின்னர் மழை பெய்தது. இதன் காரணமாக இன்றைய பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் திருவனந்தபுரம் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டமும் மழை காரணமாக தாமதம் ஆகி வருகிறது. இந்த போட்டியும் மழை தொடர்ந்து பெய்தால் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
இதனை அடுத்து இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் அக்டோபர் மூன்றாம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
மழையால் தாமதமான இந்தியா vs இங்கிலாந்து பயிற்சி போட்டி!