1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (14:08 IST)

சிக்ஸர்களுக்கு மேல் 8 ரன்கள், 10 ரன்கள் நிர்ணயிக்க வேண்டும்: ரோஹித் சர்மா வலியுறுத்தல்..!

Rohit Sharma
தற்போது கிரிக்கெட் விளையாட்டில் அதிகபட்சமாக ஒரு பந்துக்கு ஆறு ரன்கள் எடுக்கும் நிலை இருக்கும் நிலையில் அதிகபட்சமாக எட்டு ரன்கள், 10 ரன்கள்  அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். 
 
பேட்ஸ்மேன்கள் 90 மீட்டர் சிக்ஸ் அடித்தால் 8 ரன்கள் அளிக்க வேண்டும் என்றும் 100 மீட்டர் சிக்ஸ் அடித்தால் 10 ரன்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு நிர்ணயம் செய்தால் கிரிக்கெட் மேலும் சுவராசிமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். 
 
இது குறித்து ஐசிஐசி ஆய்வு செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலம் காலமாக கிரிக்கெட் ஆரம்பத்தில் இருந்தே ஆறு ரன்கள் அதிகபட்சமாக இருந்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

இதுபோல் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால் கிரிக்கெட் விளையாட்டின் சுவாரசியம் மேலும் கூடுமா அல்லது குறையுமா என்பதை பொறுத்திருந்துப் பார்க்கலாம்.
 
 
Edited by Mahendran