1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Ashwin to Exit CSK? Fans in Shock

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

அஸ்வின்
2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அடுத்த ஆண்டு அந்த அணியிலிருந்து விலகி வேறு அணிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
2025 ஐபிஎல் ஏலத்தில் ₹9.75 கோடிக்கு அஸ்வினை சிஎஸ்கே அணி எடுத்திருந்தது. தற்போது, அவரே அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. 
 
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், அணியிலிருந்து விலக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அஸ்வினும் வெளியேற இருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 
 
சிஎஸ்கே அணியில் உள்ள ஒரு  தமிழர் என்ற பெருமையுடன் அஸ்வின் அணியில் இருந்த நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!