1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Kohli with white beard made speculations in cricket world

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் திடீரென கடந்த ஏப்ரல் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்றளவும் விவாதப் பொருளாக உள்ளது. தற்போது 36 வயதாகும் அவர் ஓய்வு முடிவை அறிவித்த போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. கோலியின் இந்த திடீர் அறிவிப்புக்கு என்ன காரணம் என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

ஏனென்றால் அவரின் உடல்தகுதிக்குக் குறைந்தது இன்னும் 4 ஆண்டுகளாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி இருக்கலாம். கோலி ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு முன்பாகவே இதுபற்றி அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கசிந்தன. அப்போது அவரிடம் பலரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது. பிசிசிஐ அவருக்கு உரிய மரியாதையைக் கொடுக்காததன் காரணமாகதான் அவர் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து தனது ஓய்வு பற்றி கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கோலி “நீங்கள் நான்கு நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தாடிக்கு டை அடிக்கிறீர்கள் என்றால், ஓய்வு பெறும் தருணம் வந்துவிட்டது என்று அர்த்தம். நான் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் என் தாடிக்கு டை அடித்தேன்” எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது கோலியின் சமீபத்தையப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் தோனி நரைத்த தாடியோடு காணப்படுகிறார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ள நிலையில் “கோலிக்கு வயது ஆகிடுச்சோ?” என்றும் “கோலியிடம் இருந்து விரைவில் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவிப்பு வரப் போகிறதோ?” என்றும் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!