தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெய்ஸ்வால் செய்த சாதனை.. சச்சின், டிராவிட், சேவாக் பட்டியலில் இடம்..!
- ருத்துராஜைக் கழட்டிவிட முடிவெடுத்துள்ளதா சிஎஸ்கே?… சஞ்சு சாம்சனால் கிளம்பும் சர்ச்சை!
- சஞ்சு சாம்சனை ட்ரேட் செய்ய ஆர்வமாக உள்ளோம்… சிஎஸ்கே நிர்வாகத்திடம் இருந்து வெளியான தகவல்!
- அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!
- 18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!
சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!
இந்த சீசன் ஐபிஎல் தொடரில் மோசமான வெற்றிகளைப் பெற்று ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறாத அணியாக பின்னடைவை சந்தித்தது ராஜஸ்தான் ராயல்ஸ். அந்த அணியின் சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினாலும் இந்த தொடரில் காயம் காரணமாக நான்கு போட்டிகளில் அவருக்குப் பதிலாக ரியான் பராக்தான் கேப்டனாக செயல்பட்டார்.
மேலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரான ரியான் பராக்கிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற ஒரு தோற்றமும் எழுந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக கிசுகிசுக்கள் உலவ ஆரம்பித்தன. அவர் சி எஸ் கே அணியில் இணையப் பேச்சுவார்த்தை நிலவுவதாக கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் சி எஸ் கே அணி ட்ரேட் மூலம் வீரர்களை வாங்குவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளது. அதனால் அப்படி நடக்காது எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் இப்போது சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியை விட்டு செல்லப் போவதில்லை என்றும் அந்த அணியிலேயே தொடரப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சென்னை அணிக்கு சஞ்சு வருவார் என எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் அமைந்துள்ளது.