செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (11:12 IST)

இம்ரான் கானின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!

இம்ரான் கானின் சாதனையை சமன் செய்த அஸ்வின்!
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கானின் சாதனையை சமன் செய்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் சிறப்பாக பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் செயல்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது அவரின் 8 ஆவது தொடர்நாயகன் விருதாகும்.

இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், நியூஸிலாந்தின் ரிச்சார்ட் ஹாட்லி, ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் ஆகியோர் 8 முறை தொடர்நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் சாதனையை இப்போது அஸ்வின் சமன் செய்துள்ளார்.

11 முறை தொடர்நாயகன் விருதுபெற்று முத்தையா முரளிதரன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் 9 முறை விருதுபெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.