வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 7 ஏப்ரல் 2018 (18:10 IST)

உலகக்கோப்பையை வென்றால் சட்டையை இல்லாமல் நடப்பேன் - விராட் கோஹ்லி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, 2019 உலகக்கோப்பை வென்றால் ஆக்ஸ்போர்டு தெருவில் சட்டை இல்லாமல் நடப்பேன் என்று கூறியுள்ளார்.

 
இந்திய அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி பொறுப்பேற்ற பின் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தோனி கேப்டனாக இருந்தபோதே இந்திய அணி வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதை விட மேலும் வலுவாக நம்பர் ஒன் அணியாக உள்ளது.
 
விராட் கோஹ்லி தற்போது ஒய்வில் உள்ளார். ஐபிஎல்2018 தொடரில் இன்று தொடங்குகிறது. இதில் பெங்களூர் ராயல்ஸ் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. இந்நிலையில் தற்போது 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலக்க்கோப்பையை வென்றால் ஆக்ஸ்போர்டு தெரிவில் சட்டை இல்லாமல் நடப்பேன் என்று கூறியுள்ளார்.
 
இங்கிலாந்து எதிராக தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றப்போது அப்போதைய கேப்டன் கங்குலி சட்டை கழற்றி சுற்றியது இந்திய ரசிகர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.