வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (06:46 IST)

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள் அணி

ஜிம்பாவே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று மேற்கிந்திய தீவுகள் அணி, ஸ்காட்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை ஸ்காட்லாந்து தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, கிறிச்கெயில் விக்கெட்டை முதலிலேயே இழந்தது. இருப்பினும் சாமுவேல்ஸ், லீவிஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஆனால் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதால் அந்த அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 198  ரன்கள் மட்டுமே எடுத்தது

இதனால் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி, 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 125 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றி பெற இன்னும் 74 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி மேற்கிந்திய தீவுகள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உலக கோப்பைக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.