திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 மார்ச் 2018 (10:47 IST)

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி

ஜிம்பாப்வே நாட்டில் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணி, அயர்லாந்து அணியை வென்று தகுதி பெற்றது.
 
நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது. அதிகபட்மாக பால் ஸ்டிர்லிங் 55 ரன்களும், கெவின் ஓ பிரையன் 41 ரன்களும் எடுத்தனர். 
 
பின்னர் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு  213 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக முகமது ஷாசாத் 54 ரன்களும், குல்படின் நயிப் 45 ரன்களும் எடுத்தனர்.
 
இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 2019-ம் ஆண்டுக்கான உலகககோப்பையில் கலந்து கொள்ளும் அணிகளின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.