1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Afganisthan tops the points table

குருப் பி பிரிவில் நம்பர் 1 இடத்தில் ஆப்கானிஸ்தான்… அசைக்க முடியாத ரன்ரேட்!

T20 World Cup; Afghanistan team wins
நேற்று நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பரபரப்பாக நடந்து வரும் இத்தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி விளையாடியது. இதில், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்து 191 ரன்கள் ஸ்காட்லாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 10.2 ஓவர்களில்  60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான், 6.9 என்ற ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.
அடுத்த கட்டுரையில்
இந்திய வீரர்கள் இப்போது இதைதான் செய்யவேண்டும்… கவாஸ்கர் ஆலோசனை!