வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 அக்டோபர் 2021 (13:06 IST)

பாகிஸ்தானிடம் தோற்றாலும் சாதனை படைத்த கேப்டன் கோலி!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 

 
கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.
 
இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்து விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். உலகக்கோப்பை வரலாற்றில் 10 அரைசதம் அடித்த அவர் கிரிஸ் கெய்லின் சாதனையை நேற்று முறியடித்தார்.