ஐபிஎல் தொடரில் அதானி டீம்… பிசிசிஐ ஆலோசனை!

Last Updated: வியாழன், 3 டிசம்பர் 2020 (16:29 IST)

ஐபிஎல் தொடரில் அணிகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் படவுள்ள நிலையில் அதில் ஒரு அணியை அதானி குழுமம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த வருடம் கொரோனாவால் தள்ளிப்போனாலும் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. பல நூறு கோடி மக்கள் தொலைக்காட்சிமற்றும் டிஜிட்டல் மீடியாக்கள் போட்டிகளைப் பார்த்தனர். இந்நிலையில், அடுத்த வருடம் ஒரு புதிய ஐபிஎல் டீம் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த ஐபிஎல் அணியை மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் வாங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே 8 அணிகள் உள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டில் 9 அணிகள் களமிறங்கவுள்ளதாகத் தெரிகிறது. இந்த அணி குஜராத்தை மையமாக வைத்து பெயர் சூட்டப்படும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் 10 அணிகள் விளையாடக் கூடும் எனவும் பேச்சுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சேர்க்கப்பட உள்ள இரண்டு அணிகளில் ஒன்றை அதானி குழுமம் வாங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. புனே அல்லது அகமதாபாத்தை மையமாகக் கொண்டு உருவாக உள்ள அணியை வாங்க அதானி குழுமம் ஆர்வமாக உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :