வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (15:25 IST)

அடேய் ஸ்மித்து, மேக்ஸூ.. இப்ப மட்டும் நல்லா விளையாடுறீங்களேயா! – கலகலக்கும் ஐபிஎல் அணிகளின் ட்வீட்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கி நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆட்டம் குறித்து ஐபிஎல் அணிகள் ட்விட்டரில் இட்டுள்ள பதிவு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. இதில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களான ஆரோன் பின்ச், ஸ்மித், மேக்ஸ்வெல் ஆகியோர் இதற்கு முன்னர் ஐபிஎல் அணிகளுக்காகவும் விளையாடி இருந்தனர். கிங்ஸ் லெவன் அணியில் இருந்தபோது பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தாமல், ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் அடிக்கடி அவுட் ஆகி ஏமாற்றத்தை அளித்த மேக்ஸ்வெல் இந்த ஒருநாள் தொடரில் 19 பந்துகளில் 3 சிக்ஸர் 5 பவுண்டரிகள் விளாசி 45 ரன்களை ஈட்டினார்.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்விட்டர் கணக்கில் கிங்ஸ் லெவனை கலாய்க்கும் விதமாக ”மேக்ஸ்வெல் சிக்ஸ் அடிக்கிறார் பாத்தீங்களா?” என பதிவிட்டுள்ளனர். அதற்கு பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கிங்ஸ் லெவன் அணி ‘மேக்ஸ்வெலாவது சிக்ஸ்தான் அடிக்கிறார். ஆனா உங்க கேப்டன் ஸ்மித் செஞ்சுரி அடிக்கிறார். ஆக கணக்கு சரியா போச்சு’ என கை குலுக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளனர். இந்த ட்வீட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.