ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:02 IST)

ஐபிஎல் போட்டிகளை 94ஆக அதிகரிக்க திட்டமா?

IPL
ஐபிஎல் தொடரில் தற்போது 74 போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் வருங்காலத்தில் 94 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பத்திற்கு உரிய போட்டியாக ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த போட்டியை பார்க்க கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் 74 போட்டிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டில் 84 போட்டிகள் நடத்தப்படும் என்றும், 2027 ஆம் ஆண்டில் 94 போட்டிகளும் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன 
படிப்படியாக போட்டிகள் அதிகரிக்கப்படும் என்றும் ஐபிஎல் போட்டிகளுக்கு கிடைத்துவரும் அதிக வரவேற்பு காரணமாகவே போட்டிகள் அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஐபிஎல் போட்டிகளில் எண்ணிக்கையை 94 என அதிகரிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran