கிரிக்கெட் விளையாட தெரிந்ததால் விஷ்ணு விஷால் & விக்ராந்துக்கு அடித்த ஜாக்பாட்!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு வேடத்தில் நடிக்கும் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு லால் சலாம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிக்க முதலில் நடிகர் அதர்வா முரளி தான் ஒப்பந்தம் ஆனதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்துக்குக் காரணம், விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவருமே தொழில்முறை கிரிக்கெட் விளையாட தெரிந்தவர்கள் என்பதுதானாம். படத்தின் கதைக்களம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் தெரிந்த நடிகர்கள் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.