திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (15:14 IST)

தீவிர பயிற்சியில் விராட் கோலி..வைரலாகும் வீடியோ

ஆஸ்திரேலிய நாட்டில் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா, ஜிம்பாவே உள்ளிட்ட அணிகள் வெளியேறிவிட்டன.

இந்த நிலையில், வரும் 10 ஆம் தேதி  நடக்கும் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடவுள்ளளது.

இப்போட்டியில் விளையாடுவதற்கான பயிற்சிகள் இன்று இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்திய வீரர் விராட் கோலி இன்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். இனந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கேப்டன் ரோஹித்சர்மா காயமடைந்துள்ளதால் அவர் 10 ஆம் தேதி நடக்கும் அரையிறுதியிப் போட்டியில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj