தொடர்புடைய செய்திகள்
- சொன்னா சொன்னதுதான்..! டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி!
- பிசிசிஐ வேண்டுகோளை ஏற்காத கோலி…. டெஸ்ட் ஓய்வில் உறுதியில் இருக்கிறாரா?
- தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!
- ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!
- கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்தது ஏன்?.. மனம் திறந்த விராட் கோலி!
கோலியின் ஓய்வு முடிவைத் திரும்பப் பெற சொல்லி பிசிசிஐ கேட்கவில்லை.. வெளியான தகவல்!
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராகவும், ஏராளமான ரசிகர்களையும் கொண்டவராக இருப்பவர் விராட் கோலி. ரசிகர்களால் கிங் கோலி என்று அழைக்கப்படும் விராட் கோலி இந்திய அணிக்காக டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து வகை விளையாட்டுகளிலும் பல சாதனைகளை படைத்துள்ளார்.
சமீபத்தில் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. எதிர்பார்த்தது போலவே இன்று அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்துள்ள்ளது.
அவர் தற்போது ஓய்வை அறிவிப்பது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கிரிக்கெட் நிபுணர்கள் பேசி வந்த நிலையில், விராட் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என பிசிசிஐயும் பேசி வந்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது ஜாக்ரான் என்ற வட இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிசிசிஐ கோலியிடம் அப்படி எந்த வேண்டுகோளையும் வைக்கவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பிசிசிஐக்கும் கோலிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவான வண்ணம் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்