ரஸல், கில் அபார பேட்டிங்: அடுத்த சுற்றுக்கு தயாராகும் கொல்கத்தா!

Last Modified திங்கள், 29 ஏப்ரல் 2019 (06:33 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றதால் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தயாராகி வருகிறது.
நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. ரஸல் 40 பந்துகளில் 80 ரன்களும், கில் 45 பந்துகளில் 76 ரன்களும் அடித்தார். லின் 29 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார்.

233 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தும் மும்பை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஸல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது, முதல் மூன்று இடத்தில் டெல்லி, சென்னை, மும்பை உள்ளது. டெல்லி, சென்னை அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இன்னும் இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற காத்திருக்கின்றன.இதில் மேலும் படிக்கவும் :