30 பந்தில் 62 ரன்கள்: ஹூடா அதிரடியால் சென்னைக்கு 154 ரன்கள் டார்கெட்!
30 பந்தில் 62 ரன்கள்: ஹூடா அதிரடியால் சென்னைக்கு 154 ரன்கள் டார்கெட்!
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு இடையிலான 53 வது லீக் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்துள்ளது
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. முக்கிய விக்கெட்டுகள் மடமடவென சொற்ப ரன்களில் விழுந்தாலும் கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹூடா, 30 பந்துகளில் 62 ரன்கள் விளாசினார். அதில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 154 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது சென்னை அணி விளையாடி வருகின்றது சற்றுமுன் வரை சென்னை அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது