சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தபின் டாஸ்மாக் தொடர்பாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்குவதை தடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இந்நிலையில்தான் டாஸ்மாக் கடைகளில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க மதுபானங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்திருக்கிறது.
இணையதளம் மூலம் தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து அந்த QR கோடை டாஸ்மாக் கடைகளில் காட்டி மதுபானங்களை பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டத்திற்கு பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது மது குடிப்பவர்களை ஊக்குவிக்கும் என்பது அவரக்ளின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளிளித்த மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் வீடு தேடி மதுபானம் வரும் என சொல்வது தவறு.. ஆன்லைன் மூலம் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்.. அதுவும் பரிசோதனையில்தான் இருக்கிறது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசுக்கு இல்லை. மது பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்குவதை தடுப்பதற்காகவும், அனைத்து வகையான மதுபானங்களும் கிடைக்கவே இந்த ஏற்பாடு என அவர் கூறியிருக்கிறார்.